அல்சர்" பாதிப்பு.:. மது குடித்த 17 வயது பள்ளி சிறுவன்.. திடீர் வயிற்று வலியால் பரிதாபமாக உயிரிழப்பு - ஆசிரியர் மலர்

Latest

26/09/2022

அல்சர்" பாதிப்பு.:. மது குடித்த 17 வயது பள்ளி சிறுவன்.. திடீர் வயிற்று வலியால் பரிதாபமாக உயிரிழப்பு

மது அருந்த 17 வயது மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டாஸ்மாக் மூலமே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியாருக்கு மது விற்பனையில் அனுமதி இல்லை.தமிழ்நாட்டில் பூரண மது விலக்கைக் கொண்டு வர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், ஷாக் சம்பவம் ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து உள்ளது.


டாஸ்மாக்


டாஸ்மாக் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மட்டுமே தமிழ்நாட்டில் மது விற்பனை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும், 21 வயதுக்குக் கீழானவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் கூட மது விற்பனை செய்யப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாடுகள் உள்ளன.


கோரிக்கை


பள்ளி சீருடையிலேயே டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று மாணவர்கள் மது வாங்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு உரியத் தீர்வு காணப்படவில்லை என்றால் மது விற்பனைக்கே ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க நேரிடம் என்று ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்து உள்ளது.


ராமநாதபுரம்


இந்தச் சூழலில் மது குடித்த 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள போத்த நதி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஆறு மாதங்களாகவே அவ்வப்போது நண்பர்களுடன் இணைந்து மது குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.


அல்சர்

அந்த மாணவருக்கு அல்சர் பாதிப்பும் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை அப்படித்தான் அந்த மாணவர் நண்பர்களுடன் இணைந்து மீண்டும் மது குடித்து உள்ளான். அப்போது அந்த சிறுவனுக்கு திடீரென மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த மாணவர் அருகே உள்ள மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.


உயிரிழப்பு


இருப்பினும், அவருக்கு வயிற்று வலி தொடர்ந்து அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாணவர் சிகிச்சைக்கா கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதிலும், அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மண்டல போலீசார், உயிரிழந்த மாணவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.:.: ,

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459