பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 06.09.2022 - ஆசிரியர் மலர்

Latest

06/09/2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 06.09.2022

 _20180701_211806



திருக்குறள் :

பால்: பொருட்பால்

அதிகாரம்: நல்குரவு

குறள் 1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். 

பொருள் :
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

பழமொழி :
There are more ways to the wood that one. 


ஒரு ஊருக்கு போக பல வழிகள் உண்டு


இரண்டொழுக்க பண்புகள் :

1. தேனீ எறும்பு போல சுறுசுறுப்பாக உழைக்க முயற்சிப்பேன்.

 2. என்னுடைய உழைப்பு பெயருக்காக அல்ல பேர் வாங்கும் அளவுக்கு உழைப்பேன்.

பொன்மொழி :

என்றும் நினைவில் கொள், மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது - கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு :

1.டைட்டானிக் என்ற உல்லாச கப்பல் வட அட்லாண்டிக் கடலில் எந்த ஆண்டு மூழ்கியது ? 

 1912 .

.2.இந்தியா மயிலை தேசிய பறவையாக அறிவித்த ஆண்டு எது?

1964.

English words & meanings :

fa-tuo-us - foolish or stupid. Adjective. He made fatuous comments. மடத்தனமான, பயனற்ற. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு :

100 கிராம் தேங்காய் பாலில் கீழ்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்கள் நமக்குக் கிடைக்கும்.

100 கிராம் தேங்காய் பாலில் 169 கலோரிகள் இருக்கின்றன.

புரதச்சத்து - 1.1 கிராம்

கொழுப்புச்சத்து - 16.9 கிராம்

சாச்சுரேட்டட் கொழுப்பு - 14.6 கிராம்

கார்போஹைட்ரேட் - 3.3 கிராம்

தேங்காய்ப்பாலில் போதிய அளவு கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன

NMMS Q 54:

சாய்சதுரத்தின் மூலைவிட்டங்களுக்கு இடையே உள்ள கோணம் என்ன? 

விடை : 90°

நீதிக்கதை

ராஜா கொடுத்த ஆடை

அரண்மனையை ஒட்டி பிச்சைக்காரன் ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள் அந்த அரண்மனைக் கதவில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அரச உடை அணிந்து எப்படி விருந்திற்கு செல்வது என்று யோசித்தான். அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணியவனின் மனதில் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ராஜாவைப் பார்க்க வேண்டும் என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே? என்றார் அரசர். ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன் என்று பணிவுடன் கேட்டான்.

மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான். தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான். இந்த உடை நீ இறக்கும் வரை அப்படியே இருக்கும் என்றார். ஆடை கொடுத்த மன்னருக்கு மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்பும் சமயத்தில் மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ஒருவேளை, அரசர் கொடுத்த இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே? என்று யோசித்தான். உடனே விரைந்து சென்று தன் பழைய உடைகளை எடுத்துக் கொண்டான். 

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை. எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரித்து வைத்துக் கொள்வதிலேயே அவனின் எண்ணம் இருந்ததால், அவனால் பரிமாறப்பட்ட பதார்த்தங்களைக்கூட சரிவர ருசிக்க முடியவில்லை. 

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த பிச்சைக்காரனுக்கு பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையைகளையே பார்த்தனர். இவ்வாறே நாட்கள் கழிந்தன. இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான். பிச்சைக்காரனின் பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டதை எண்ணி வருந்தினார்.

நீதி :
துன்பத்தையே எண்ணிக் கொண்டு இன்பத்தை இழந்துவிடக்கூடாது.

இன்றைய செய்திகள் - 06.09.22

*"மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அதை வழங்குவதை அரசு தன் கடமையாக நினைக்கிறது. பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்களுக்கு 1000 ரூபாய் கிடைப்பதால், கல்லூரியில் நுழைகிறார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும்" என்று "புதுமைப் பெண்"  திட்டத் தொடக்க விழாவில்  முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

*தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

*இணையத்தில் முன்பதிவு செய்தால் இருவழி பயணச்சீட்டுக்கு 10 சதவீதம் சலுகை: விரைவு போக்குவரத்துக் கழகம் தகவல்.

*உலகத் தரத்துக்கு மாறும் டெல்லி ரயில் நிலையம்: ட்விட்டரில் படங்களை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்.

*ஜப்பானில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

*அடுத்த 18 ஆண்டுகளில் உலகம்முழுவதும் உள்ள தரிசு நிலங்களை, 50 சதவீதம் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஜி-20 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

*டி20 போட்டியில் அதிக அரைசதங்கள்: ரோகித்தை முந்தி விராட் கோலி முதலிடம்.

*அமெரிக்க ஓபன் டென்னிசில் ரபெல் நடால், ஸ்வியாடெக் ஆகியோர் நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Today's Headlines

**"Government does not consider providing 1000 rupees per month to students for free. The government thinks it is its duty to provide it. As girls who drop out of school get 1000 rupees, they enter college. This will increase the educational development of Tamil Nadu," Chief Minister Stalin's speech at the inauguration ceremony of "Pudumai Pen" project said.

 *Health Minister M. Subramanian has said that dengue is under control in Tamil Nadu.

* 10 percent discount on two-way tickets if booked online: Rapid Transit Corporation Information

* Delhi railway station to become world class: Ministry of Railways posted pictures on Twitter.

* The number of female university professors in Japan has reached an all-time high.  The Ministry of Education of the country expressed happiness about this.

 *The G-20 countries have agreed to commit to reducing wasteland worldwide by 50 percent over the next 18 years.

 *Most fifties in T20I: Virat Kohli overtakes Rohit

 *Rafael Nadal and Sviatek have advanced to the 4th round after winning straight sets in US Open tennis.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459