ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

30/08/2022

ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு.

 

Tamil_News_large_3110993

முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 2ம் தேதி துவங்குகிறது.


இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:


அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளுக்கு தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், 48 மணி நேரத்துக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றப்படும்.


சம்பந்தப்பட்டவர் குறிப்பிட்ட நேரத்தில், தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வர வேண்டும். அவற்றின் நகல்களும் வைத்திருக்க வேண்டும்.மொபைல் போன், கைப்பை அனுமதி கிடையாது. பெற்றோர், சிறார், உறவினர்களை அழைத்து வரக்கூடாது. வளாகத்தில் கூட்டம் சேரக்கூடாது. கூடுதல் விபரங்களை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment