கன்னி ராசியில் உச்சம் பெறும் புதன்... இந்த ராசிக்காரர்கள் காட்டில் அதிர்ஷ்ட மழைதான்!! - ஆசிரியர் மலர்

Latest

19/08/2022

கன்னி ராசியில் உச்சம் பெறும் புதன்... இந்த ராசிக்காரர்கள் காட்டில் அதிர்ஷ்ட மழைதான்!!


 சிம்மராசியில் இருந்த புதன் தனது வீடான கன்னி ராசியில் உச்சம் பெற்று அமர்கிறார் இந்த இடப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் யோகங்கள் தேடி வரும். வருமானமும் அதிகரிக்கும். கன்னி ராசியில் அமரும் புதன் பகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான் அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். மிதுனம், கன்னி புதனுக்கு ஆட்சி வீடு. தனது வீடான கன்னியில் உச்சமடையும் புதன், மீனத்தில் நீச்சமடைகிறார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டால் பேச்சு பாதிப்பு, நரம்பு பிரச்சினை, மனநோய் பாதிப்பு ஏற்படும். இந்த புதன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நன்மை யாருக்கு பரிகாரம் என பார்க்கலாம்.ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டால் பேச்சு பாதிப்பு, நரம்பு பிரச்சினை, மனநோய் பாதிப்பு ஏற்படும். தாய்மாமன் அப்பா, அண்ணி, இளைய சகோதரர் , நண்பர்கள், இளைய சகோதரி, மனைவி, வணிகம் ஜோதிடம், பெயிண்டர், வழக்கறிஞர், ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர், விஞ்ஞானிகள், அனைத்து வகை பேச்சாளர்கள். புத்திசாலித்தனத்திற்கு அதிபதி. இந்த புதன் பெயர்ச்சியால் என்னென்ன பலன்களையும், பாதிப்புகளையும் தரும் என்று பார்க்கலாம். 


மேஷம்


கன்னி ராசியில் ஆட்சி பெற்று அமரும் உச்சம் பெறும் புதனால் பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழ் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். 6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் புதன் அமர்வதால் நரம்பு தொடர்பான நோய்களும் தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.


ரிஷபம்


பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரும் புதனால் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் நன்மைகள் நடக்க மகாவிஷ்ணுவை சகஸ்ராநாமம் கூறி வணங்கலாம்.


மிதுனம்


சுக ஸ்தானத்தில் அமரும் புதனால் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள்.


கடகம்


முயற்சி ஸ்தானமான புதன் பகவானால் புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் நன்மை ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம். புதன்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.


சிம்மம்


உங்கள் ராசியில் இருந்த புதன் பகவான் தன, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய மேலும் நன்மைகள் நடக்கும். புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்யலாம்.


கன்னி


புதன்பகவான் உங்கள் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.


துலாம்


புதன் உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்வதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்களில் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் உண்டாகும். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.


விருச்சிகம்


புதன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். இது யோகமான காலமாகும். பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். தினசரி சூரிய பகவானை வழிபடவும். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க நன்மைகள் நடைபெறும்.


தனுசு


புதன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் அமர்கிறார். பணியிடத்தில் உங்கள் வேலை பளிச்சிடும். பண வருவாய் திருப்தி தரும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் நன்மை செய்வார்கள். புதன்கிழமைகளில் பச்சைப்பயறு வேகவைத்து நிவேதனம் செய்யலாம்.


மகரம்


புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது இடத்தில் அமர்வதால் பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழியில் அதிக உதவிகள் கிடைக்கும். பெருமாள் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.


கும்பம்


புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார். பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். எட்டில் புதன் மறைவது நல்ல அமைப்புதான் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் பசுவிற்கு பச்சைப்பயறு சாப்பிட கொடுக்க பாதிப்புகள் சற்று குறையும்.


மீனம்


களத்திர ஸ்தானத்தில் புதன் அமர்வதால் வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி விடும். பசுவிற்கு வெல்லம் கொடுக்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459