அதிர்ச்சி....மின்சார ரயிலில் பள்ளி மாணவி ஆபத்தான சாகசம் - ஆசிரியர் மலர்

Latest

18/08/2022

அதிர்ச்சி....மின்சார ரயிலில் பள்ளி மாணவி ஆபத்தான சாகசம்


 சென்னை மின்சார ரயிலில், கல்லூரி மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில்  பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் கால்களை தரையில்வைத்தவாறு சாகசம் செய்துள்ளார். ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்த நெஞ்சை பதப்பதைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.ஒருசில கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல், ரயில் மற்றும் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை அவர்கள் சாசகம் என்று கூறிக்கொள்வதோடு, ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டும் வருகின்றனர். இவர்களின் ஆபத்தான பயணத்தை, அவர்களுடன் பயணிக்கும் சிலரும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர்.இதுபோன்ற ஆபத்தான பயணங்களில் ஈடுபடக்கூடாது என்றும் ஆசிரியர்களும்  போலீசாரும், பெற்றோரும் தொடர்ந்து அறிவுரைகள் எடுத்துரைத்தும் ஒருசில மாணவர்கள் திருந்தியபாடில்லை. ஆனால், தற்போது மாணவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளி மாணவியும் ஓடும் ரயிலில் சாகசம் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலில்  பள்ளி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். ரயில் புறப்படும் நேரத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் சிலர் ரயிலில் ஏறினர். அப்போது  பள்ளி மாணவி ஒருவர், ரயிலில் படிக்கட்டு அருகே நின்றவாறு, நடைமேடையில் கால்களை நடைமேடை முடியும் வரையில் தேய்த்தவாறு மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்தார்.இதனை அந்த ரயில் பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சி பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி, பெற்றோர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.பள்ளி மாணவி ஒருவர் கல்லூரி புள்ளிங்கோவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஸ்கேட்டிங் செய்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபடாதவாறு, ரயில் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் எச்சரிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

1 comment:

  1. முதலில் புள்ளிங்கோ தப்பு சாகசம் இப்படி எல்லாம் தப்பு தப்பா போட்டு இத எல்லாத்தையும் படிச்சு பார்த்துட்டு தான் நம்ம பெரிய ஆளு அப்படிங்கற நினைப்பு அவங்களுக்குள்ள வருது. அதைப்பார்த்து மற்றதும் பண்ணுதுக.

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459