போதைப் பழக்கத்திற்கு எதிராக பள்ளிகளில் இன்று எடுக்க வேண்டிய உறுதிமொழி - ஆசிரியர் மலர்

Latest

11/08/2022

போதைப் பழக்கத்திற்கு எதிராக பள்ளிகளில் இன்று எடுக்க வேண்டிய உறுதிமொழி

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழிபோதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். 

நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்.

மேலும் எனது குடும்பத்தினரையும் , நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.

 போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி , நுகர்வு , பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன்.

 மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன் . நன்றி ! வணக்கம் !

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459