தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 2022 - 2023 | தேர்வுத்துறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

06/08/2022

தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 2022 - 2023 | தேர்வுத்துறை அறிவிப்பு

 பள்ளி மாணவ , மாணவியர்களின் அறிவியல் , கணிதம் , சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023 - ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.


இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு அரசின் 10 - ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.


2022-2023 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் , 01.10.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது 


இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனவே , மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 09.09.2022 .

TTSE 2022 - Press Release - Download here

No comments:

Post a Comment