அரசு ஆரம்பப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் : செப்டம்பர் 15-ந்தேதி தொடக்கம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

02/08/2022

அரசு ஆரம்பப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் : செப்டம்பர் 15-ந்தேதி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. 1,545 பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சிற்றுண்டிக்கு ஆண்டுக்கு ரூ.1.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால் மாநில அரசு நிதி வழங்குவதால் மாநகராட்சி இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் அரசு சார்பில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படுகின்றன. பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும், ‘என்ஜினீயர்களும் சமையல் கூடம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். 6 இடங்களில் காலை உணவை தயாரித்து வழங்குவதற்கு உகந்த இடம் ஆய்வு செய்யப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி மண்டலம் 1 முதல் 5 வரையில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமே முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது. அதனால் வட சென்னை பகுதியில் உள்ள இந்த மண்டலங்களில் சமையல் கூடம் அமைக்கப்படுகிறது. அம்மா உணவகங்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்குவதில் பல்வேறு சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் தனியாக சமையல் கூடம் அமைக்க 6 இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. அங்கிருந்து காலை சிற்றுண்டி தயாரித்து 36 பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்படும். செப்டம்பர் 15-ந்தேதி இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment