தேசிய கல்விக் கொள்கையில் மதிய உணவுத் திட்டத்தில் இடம் பெற்று இருக்க வேண்டிய உணவுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது - ஆசிரியர் மலர்

Latest

12/07/2022

தேசிய கல்விக் கொள்கையில் மதிய உணவுத் திட்டத்தில் இடம் பெற்று இருக்க வேண்டிய உணவுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது

மத்திய அரசு நாட்டிற்கு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவாகச் செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.அதேநேரம் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. 


கல்வி கொள்கைகுறிப்பாக புதிய தேசிய கல்விக் கொள்கையில் "இந்திய அறிவு அமைப்பு" என்ற போர்வையில் குறிப்பிட்ட அறிவு முறை திணிக்க முயல்வதாக இதை எதிர்ப்பவர்கள் சாடி உள்ளனர். அண்டை மாநிலமான கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டைகளை வழங்குவது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் என்றும் இந்தியர்களின் உடல் அமைப்பை வைத்துப் பார்க்கும்போது, தொடர்ச்சியாக முட்டை மற்றும் இறைச்சியை எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளதாகத் தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு தெரிவித்துள்ளது.


பாகுபாடு


இவை அனைத்தும் தேசிய கல்விக் கொள்கை சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த நிபுணர் குழுவின் நிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும், "ஒரே வகுப்பு மாணவர்களுக்கு வெவ்வேறு உணவுகளை வழங்குவது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். அதாவது ஒரு தரப்பினருக்கு முட்டையும் மற்றொரு தரப்பிற்குக் கிராம்- வாழைப்பழம் போன்றவை கொடுத்தால் அது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கிறது.ரத்த சோகைமேலும், இது குழந்தைகளுக்கு இடையே உளவியல் ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவது மற்றும் எந்த பாகுபாடும் இல்லாமல் நடத்துவது தான் இந்தியாவின் தர்மம் ஆகும். சாத்விக் உணவுகளான நிலக்கடலை, எள் லட்டு/ வெல்லம் போன்ற இயற்கை உணவுகளை அளிப்பதன் மூலம் முறையான வளர்ச்சி மற்றும் ரத்த சோகையைப் போக்க முடியும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

முட்டை


தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை முட்டை மற்றும் மாமிசத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளது. இது தொடர்பாகக் கர்நாடக அரசு அமைத்த டாக்டர் சாகர் தலைமையிலான கமிட்டியும், "குறைந்த கொழுப்பு மற்றும் பூஜ்ஜிய டிரான்ஸ்-ஃபேட் கொண்ட உணவே அதிகப்படியான ஊட்டச்சத்துக்குத் தேவைப்படுகிறது. எனவே, மதிய உணவைத் திட்டத்தில் முட்டை, சுவையூட்டப்பட்ட பால், பிஸ்கட்டை தவிர்க்க வேண்டும்.


சிக்கல்கள்


இந்தியாவில் நீரிழிவு, மாதவிடாய் சிக்கல், மலட்டுத்தன்மை அதிகரித்த வருவதால் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் விலங்குகள் சார்ந்த உணவுகள் மனிதர்களின் ஹார்மோன் செயல்பாடுகளில் தலையிடுவதாகத் தெரிவிக்கின்றன. அதேபோல பீம் மற்றும் ஹனுமான் உணவுப் பழக்கம் பற்றிய கதைகள் மூலம் குழந்தைகளுக்குச் சரியான உணவையும் வீரம், தைரியம் மற்றும் வெற்றியையும் இணைக்க உதவும்" என்று கூறப்பட்டு உள்ளது


எச்சரிக்கை


இருப்பினும், இதற்கு பல்வேறு கல்வியாளர்களும் மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு பெரிய சிக்கலாக இருக்கும் சூழலில், முட்டையை மதிய உணவுத் திட்டத்தில் இருந்து விலக்கிக் கொண்டால் அது ஊட்டச்சத்து பகிர்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459