ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப திருத்தம்: இன்று கடைசி நாள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

27/07/2022

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப திருத்தம்: இன்று கடைசி நாள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப விபரங்களை, 'ஆன்லைனில்' திருத்தம் செய்வதற்கான அவகாசம், இன்று முடிகிறது.


பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச்சில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான முதல் தாள் தேர்வு, ஆக., 25 முதல், 31 வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாளுக்கு, தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோரிடம், ஏப்.26 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் தவறுகள் உள்ளதாகவும், அவற்றை திருத்தம் செய்ய அவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்து, விண்ணப்ப விபரங்களை, ஆன்லைனில் திருத்தும் வசதி, ஜூலை 24 முதல் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது.

No comments:

Post a Comment