கலை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பிக்க இன்று கடைசி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

07/07/2022

கலை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழகம் முழுதும் 163 அரசு கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஜூன் 20ல் வெளியான நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் வகையில், கல்லுாரி கல்வி இயக்குனரகம் வழியே, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலையில் சேர விரும்புவோர், https://tngasa.in/# என்ற இணையதளம் வழியே, விண்ணப்ப பதிவு செய்து வருகின்றனர். நேற்று வரை 3.15 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 2.70 லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.இந்நிலையில், இந்த விண்ணப்ப பதிவுக்கு இன்று கடைசி நாள் என்பதால், மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, இன்னும் பிளஸ் 2 தேர்வு முடிவு வராததால், அவர்களுக்காக கூடுதல் அவகாசம் தரப்படும் என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment