எம்.பில்., பி.எச்டி.,க்கான நுழைவுத்தேர்வு:விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அழைப்பு - ஆசிரியர் மலர்

Latest

17/07/2022

எம்.பில்., பி.எச்டி.,க்கான நுழைவுத்தேர்வு:விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அழைப்பு

 ஆக., 29ல் நடக்க உள்ள எம்.பில்., - பி.எச்டி., படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்கலை துறைகள், இணைப்பு கல்லுாரிகள், ஆராய்ச்சி மையங்களில் பி.எச்டி., - எம்.பில்., படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 

ஆக., 29 காலை, 11:00 முதல் 12:30 மணி வரை தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க மாணவர்கள், ஆக.,10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுத்தேர்வு, ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலை இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விபரங்களுக்கு, 0422 -2422 222/ 2425 706.பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், ''இத்தேர்வுக்கு வரும் ஆக., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.500 விண்ணப்பக்கட்டணம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.250 கட்டணம். வரும் 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடைபெறும் மாதிரி தேர்வு எழுத வேண்டும். www.cet.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2021ம் ஆண்டு இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், அக்., 2022ம் ஆண்டுக்கான அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459