அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன்? : 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் - ஆசிரியர் மலர்

Latest

19/07/2022

அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன்? : 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை அறிவித்தது ஏன் என விளக்கம் கேட்டு தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், மாணவிக்கு நீதி கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளி மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு தனியார் பள்ளிகள் அழைப்பு விடுத்தன. இதற்கு பள்ளிக்கல்வித்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 91% தனியார் பள்ளிகள் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மொத்தம் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 987 பள்ளிகள் நேற்று இயங்கவில்லை. எச்சரிக்கையை மீறி 987 தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அளித்து தன்னிச்சையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்பட்டதால் விடுமுறை அளிக்கப்பட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 



பள்ளிகளின் விளக்கத்தை பொறுத்து நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலை நிறுத்தம் தொடர்பாக பள்ளி கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சவாத்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நாளை முதல் பள்ளிகள் இயக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்ததாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459