இண்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்போரிங்களா 5 முக்கிய விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள் - ஆசிரியர் மலர்

Latest

02/07/2022

இண்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்போரிங்களா 5 முக்கிய விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்

பணப் பரிவர்த்தனைக்காக மக்கள் பெரும்பாலும் இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்த தொடங்கியிருக்கும் நிலையில், அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 1. பாஸ்வேர்டு பணப்பரிமாற்றம் முதல் எலக்டிரிக் பில்கள், காய்கறிகள் வாங்குவது வரை என இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இதில் மோசடி நடைபெறுவது அதிகரித்து வருவதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டால், இணைய மோசடி மூலம் உங்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் முழுதுவதும் பறிபோகும் நிலை ஏற்படும். இதில் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அடிக்கடி பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பாஸ்வேர்டுகளை யாரிடமும் நீங்கள் பகிர்ந்து கொள்ளாதீர்கள் 2. பொது கம்பயூட்டர் பணப்பறிமாற்றம் செய்யும்போது பொது கணிணிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டாம். அதாவது நூலகங்கள், கம்ப்யூட்டர் சென்டர்களில் பணப்பறிமாற்றம் நீங்கள் செய்தால், உங்கள் வங்கிக் கணக்கு எளிமையாக மோசடிக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை பயன்படுத்தினாலும் மறந்தும்கூட பாஸ்வேர்டு சேமிப்புகளுக்கு ஓகே கொடுக்க வேண்டாம். பயன்படுத்திய பிறகு அந்த கம்ப்யூட்டரின் ஹிஸ்டிரிகளை அழித்துவிடுங்கள். 3. கணக்கு சரிபார்ப்பு ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனை செய்த பிறகும் உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும். உங்கள் கணக்கிலிருந்து சரியான தொகை கழிக்கப்பட்டதா? இல்லையா? என்பதைச் சரிபார்க்கவும். தொகையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும். 4. ஆன்டிவைரஸ் உங்கள் தனிநபர் கம்பயூட்டர் என்றாலும் உரிமம் பெற்ற அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆன்டிவைரஸ்களை மட்டுமே பயன்படுத்துங்கள். ஆன்டிவைரஸ்கள் வழியாகவும் உங்கள் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. அதேநேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் இல்லாத ஆன்டிவைரஸ்கள் இல்லை என்றால், நீங்கள் பைரசிகளின் தாக்குதலுக்கு எளிதாக ஆளாகுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆன்டிவைரஸ் அப்டேட்டாக இருப்பது அவசியம். 5. மோசடி இணையதளம் நீங்கள் இணையப் பரிமாற்றம் செய்யும்போது சரியான இணைய தளத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மோசடி தளத்தில், அதாவது இமெயில் அல்லது மொபைல் மெசேஜூக்கு வரும் லிங்குகளை கிளிக் செய்து உங்கள் வங்கிக் கணக்கை ஒருபோதும் உள்நுழையக்கூடாது. அப்படி செய்தீர்கள் என்றால், நீங்களே உங்களுக்கு ஆபத்தை தேடிக் கொள்கிறீர்கள் என்று பொருள். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி இண்டர்நெட் பேங்கிங்கை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459