நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை - ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆசிரியர் மலர்

Latest

13/07/2022

நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை - ஊட்டி உள்ளிட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கொட்டி வரும் கனமழை நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 15 நாட்களாகவே பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கூடலூரில் 18 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்- பிரதமர் அலுவலகம், இலங்கை விமானப் படை அறிவிப்பு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 செமீ அளவிற்கு மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

 கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென்று உயர்ந்தது.கனமழை காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100 கன அடியாக உள்ளது. இதை அடுத்து சோலையார் அணை 165 அடிக்கு 164 அடி நிரம்பியது.‌ இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.‌ அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7100 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் மூன்று மதகு வழியாக 1070 கனடியாகவும், சேடல் பகுதி வழியாக 4400 கன அடியாகவும், மொத்தம் 5470 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.,

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459