வரலாற்றில் முதல்முறை.. பெற்றோர் உயிரிழந்ததால் 10 மாத குழந்தைக்கு பணி வழங்கிய ரயில்வே துறை! - ஆசிரியர் மலர்

Latest

08/07/2022

வரலாற்றில் முதல்முறை.. பெற்றோர் உயிரிழந்ததால் 10 மாத குழந்தைக்கு பணி வழங்கிய ரயில்வே துறை!

 சத்தீஸ்கரில் விபத்து ஒன்றில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அரசுப் பணிகளில் வேலை செய்பவர்கள் மரணம் அடைந்துவிட்டால், அவர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுப்பது இயல்பாக நடக்கும் நிகழ்வு தான்.அதாவது பணியில் இருக்கும் போது அரசு ஊழியர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டால், கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் இருக்கும் மற்றொருவருக்கு வேலை கொடுக்கப்படும்.சத்தீஸ்கர்சத்தீஸ்கர் மாநிலத்தில் அப்படித்தான் விபத்தில் உயிரிழந்தோரின் மகளுக்கு ரயில்வே துறை வேலை கொடுத்துள்ளது. ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் அந்த சிறுமிக்கு வெறும் 10 மாதம் தான் ஆகிறது. அவருக்கு 18 வயது நிரம்பும்போது, தேசிய டிரான்ஸ்போர்ட்டரில் அவர் பணி புரியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கருணை அடிப்படையில் இப்படி குழந்தைக்கு வேலை அளிப்பது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


10 மாத குழந்தை


உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவி அளிக்கும் வகையிலேயே இதுபோல கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து ராய்ப்பூர் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூலை 4ஆம் தேதி ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பணியாளர்கள் துறையில் கருணை அடிப்படையில் வேலைக்கு 10 மாத பெண் குழந்தை பெயர் பதிவு செய்யப்பட்டது.


விபத்து


குழந்தையின் தந்தை ராஜேந்திர குமார் பிலாயில் உள்ள ரயில்வே யார்டில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஜூன் 1ஆம் தேதி சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில்,அவரது குழந்தை இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது. அந்த குழந்தைக்குத் தான் இப்போது வேலை வழங்கி உள்ளோம்.


உதவிகள்


குமாரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் விதிகளின்படி ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தால் வழங்கப்பட்டன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அறிவிப்புடன் நில்லாமல், கருணை அடிப்படையில் வேலை வழங்க ரயில்வே பதிவேடுகளில் குழந்தையின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது. அந்த குழந்தைக்குக் கைரேகை எடுத்த போது என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்றும் பெற்றோர் இல்லாததால் குழந்தை பயந்து அழுதுவிட்டது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459