தமிழக அரசின் TNCSC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

27/06/2022

தமிழக அரசின் TNCSC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியானது பருவகால பட்டியல் எழுத்தர்பருவகால உதவுபவர்பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 527 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: பருவகால பட்டியல் எழுத்தர்பருவகால உதவுபவர்பருவகால காவலர் பணிகளுக்கு என்று மொத்தமாக 527 பணியிடங்கள்

பருவகால பட்டியல் எழுத்தர் - 159 காலிப்பணியிடங்கள்.

பருவகால உதவுபவர் - 189 காலிப்பணியிடங்கள்.

பருவகால காவலர் - 179 காலிப்பணியிடங்கள்.

கல்வித் தகுதி:

பருவகால பட்டியல் எழுத்தர் - அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பி.எஸ்.சி., டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 பருவகால உதவுபவர் - அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பருவகால காவலர் - அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Salary:

Record Clerk - Rs.8784/-

Assistant - Rs.8717/-

Security - Rs.8717/-

வயது: 01.07.2022 தினத்தின் படிவிண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் இப்பணிக்கு BC / BC (M) / MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டு மற்றும் SC / SC (A) / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

மேலும் 08.07.2022ம் தேதி மாலை 5.00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் தகவல் பெறஅதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tncsc.tn.gov.in யில் பார்க்கலாம்.

முகவரி:

முதுநிலை மண்டல மேலாளர்கள்,

PBNo.69, சச்சிதானந்த மூப்பனார் சாலை,

மேம்பலம் அருகில்,

தஞ்சாவூர் – 613

Notification: Click Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459