அரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் -அமைச்சர்அன்பில் மகேஷ் அறிக்கை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

09/06/2022

அரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் -அமைச்சர்அன்பில் மகேஷ் அறிக்கை

LKG , UKG மாணவர் சேர்க்கை சமூக நலத்துறைக்கு மாற்றப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் செயல்படும் என அறிவிப்பு.

தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க , நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G. , U.K.G. , வகுப்புகளாக மாற்றப்பட்டு , சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன . முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால் , கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் L.K.G. , U.K.G. , வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் . ஆனால் , அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட , இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக , சுமார் 7 இலட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர் . இதன் காரணமாக , அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் ( Sections ) தொடங்கப்பட்டன . அதிகமான எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து , L.K.G. , U.K.G. , வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் , பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக அண்மையில் சென்றுள்ளனர்.

  இருப்பினும் , சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களது கல்வியினை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில் , L.K.G. , U.K.G. , வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க , அரசுப் பள்ளிகளில் L.K.G. , U.K.G./ வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது . இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் .



No comments:

Post a Comment