ஜிப்மேட் நுழைவு தேர்வு அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

11/06/2022

ஜிப்மேட் நுழைவு தேர்வு அவகாசம் நீட்டிப்பு

'ஜிப்மேட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. - பி.ஜி.பி. உட்பட ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் 'ஜிப்மேட்' என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. வரும் 2022- - 23ம் கல்வி ஆண்டுக்கான 'ஜிப்மேட்' நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு 9ம் தேதியுடன் முடிந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை ஏற்று கால அவகாசம் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் jipmat.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 011- - 4075 9000 என்ற தொலைபேசி எண்ணிலும் விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459