முடிவே இல்லயா... தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! மக்களே உஷாரா இருங்க! - ஆசிரியர் மலர்

Latest

24/06/2022

முடிவே இல்லயா... தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! மக்களே உஷாரா இருங்க!

 தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து இன்னும் கொரோனா வைரஸ் முற்றிலுமாக செல்லவில்லை. இதனால் தினசரி கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 சமீபத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சில நாட்களாக மெல்ல அதிகரித்து வருகிறது.இன்று பாதிப்பு எவ்வளவு?அதாவது ஜூன் மாதம் துவக்கம் முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000யை கடந்துள்ளது. 


தொட்டுள்ளது. 


நேற்று 1,063 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் அமெரிக்காவில் இருந்தும், ஒருவர் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்தும் வந்தவர்கள் ஆவார்கள்.


5,921 பேருக்கு சிகிச்சை

கடந்த 2 மணிநேரத்தில் கொரோனா தொற்று குணமாகி 621 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் இல்லை. இன்றைய பாதிப்போடு சேர்த்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 5,912 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 5,174 ஆக இருந்தது.சென்னையில் அதிகம்இன்றைய பாதிப்பை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக சென்னையில் 616 பேர் பாதிக்கப்பட்டுள்னளர். இதற்கு அடுத்த டியாக செங்கல்பட்டில் 266 பேரும், கோவையில் 64 பேரும், கன்னியாகுமரியில் 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, திண்டுக்கல், அரியலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்று பூஜ்ஜியமாக இருந்தது. மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது.


இதுவரை எவ்வளவு?


தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 34 லட்சத்து 65 ஆயிரத்து 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 லட்சத்து 21 ஆயிரத்து 552 பேர் குணமாகி உள்ளனர். மொத்தம் 38 ஆயிரத்து 26 பேர் பலியாகி உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000யை தொட்டு வருவதால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். அலட்சியம் செய்யாமல் இருப்பதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றி விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459