வேலை தேடுவோர் கவனத்திற்கு! வாய்ப்பு வாசல் கதவை தட்டுகிறது! கெட்டியாக பிடிச்சுகங்க! - ASIRIYAR MALAR

Latest

Education News

08/06/2022

வேலை தேடுவோர் கவனத்திற்கு! வாய்ப்பு வாசல் கதவை தட்டுகிறது! கெட்டியாக பிடிச்சுகங்க!

 

தமிழகம் முழுவதும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேலைவாய்ப்பு இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.


8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப வேலை பெற்றுக் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விவரம் வருமாறு;வேலைவாய்ப்பு வெள்ளிதமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளி - ஆக அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார்த் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.தனியார் துறைஇதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 10.06.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தப்பட உள்ளன.

 வேலைவாய்ப்பு முகாம் 


சென்னை, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, ப்ளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.அரசு வேண்டுகோள்இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.: தமிழகம் முழுவதும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களை இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவேலைவாய்ப்பு இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459