கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/06/2022

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் பள்ளிகள் வரும் 13ந்தேதி திறக்கப்பட உள்ள நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மட்டுமே தற்போது மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு முன்பே மாணாக்கர்கள் சேர்க்கை முடிந்து, பீஸ் கட்டி, பாடப்புத்தங்கள், யூனிபார்ம், ஷூ போன்றவை வழங்கப்பட்டு, 13ந்தேதி பள்ளிக்கு செல்ல மாணாக்கர்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வேலை கிடைத்தவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழ்நாட்டில் உள்ள பல தனியார்பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகிங்னறன. தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் திட்டமிட்டபடி, தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்தார். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே அட்மிஷன் முடிந்துவிட்ட நிலையில், தற்போது அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ள, சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment