தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா..? - ஆசிரியர் மலர்

Latest

23/06/2022

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா..?

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா..?*

    

 தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமல்லாமல் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த முறை அகவிலைப்படி வழக்கத்தை விட அதிகமாக உயர்த்தப்படலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 


ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தால் விலைவாசி உயருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு செலவுகள் அதிகமாகிறது. எனவே, விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என அரையாண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.


அகவிலைப்படி உயர்வு குறித்து ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி வழக்கமாக 3% உயர்த்தப்படும். அதிகபட்சமாக 6% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.


கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம் இரண்டுமே அதிகமாக உள்ளதால் விலைவாசி உயர்வு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக அகவிலைப்படி 3% உயர்த்தப்படும். இந்நிலையில், ஜூலையில் 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அல்லது 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 4-5% அகவிலைப்படி உயர்த்தப்படும் என அரசு ஊழியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.

1 comment:

  1. நிதி அமைச்சருக்கு வயிறு எரியும்...

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459