இன்றைய ராசி பலன்கள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

04/06/2022

இன்றைய ராசி பலன்கள்

 

சுபகிருது வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை 4.6.2022. இன்று அதிகாலை 12.48 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று இரவு 07.56 மணி வரை பூசம். பின்னர் ஆயில்யம். மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

அரசு வேலைக்கு எடுத்த முயற்சி வெற்றி அடையும். காலத்திற்கு ஏற்றார்போல் தொழிலில் மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள். சொந்த வீடு வாங்குவதற்கான முக்கியத்துவத்தை உணர்வீர்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும். அக்கறையுடன் வேலைப்பார்த்து முதலாளியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். மனதிற்குப் பிடித்தமான காரியங்கள் மளமளவென்று நடக்கும்.

ரிஷபம்

உங்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் உடன் பிறந்தவர் சங்கடத்தை ஏற்படுத்துவார். பக்கத்திலிருந்து தொழிலுக்கு பாதகம் செய்ய நினைப்பார்கள். பக்குவமாகக் கடந்து செல்லுங்கள். வாகனங்களில் போகும்போது சிந்தனையைச் சிதற விடாதீர்கள். விபத்துக்கள் நேரலாம். மன இறுக்கத்தைக் குறைப்பதற்காக யோகாசனப் பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள்.


மிதுனம்

வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். விரயச் செலவுகள் அதிகமாகி கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். எதிர்பார்த்துச் செல்லும் காரியங்களில் தடை உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாகவே நடக்கும். சேமிக்க நினைத்தாலும் கையில் பணம் தங்காது. பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும்.


கடகம்


மனச் சஞ்சலத்தோடு எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். அடுத்தவர் சொல்வதை அப்படியே நம்பி விடாதீர்கள். பயணங்களின்போது பொருட்களைப் பத்திரமாக வைத்திருங்கள். வேலையிடத்தில் உங்களைப் பற்றி மற்றவர்கள் மட்டமாகப் பேசுவார்கள். அதைக் கண்டு கொள்ளாதீர்கள். உங்கள் உயர்ந்த எண்ணத்தை உறவினர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சிம்மம்


நினைத்த காரியத்தை முடித்து நிம்மதி அடைவீர்கள். நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பெற்றோரைத் திருப்திப்படுத்த கடுமையாக முயற்சி செய்வீர்கள். வங்கித் தவணைகளைக் கட்டுவதில் சிரமம் உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாகும்.

கன்னி


அணை கடந்த வெள்ளம் போல் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பும் பட்டப்படிப்பில் சேர்த்து விடுவீர்கள்‌. வாடிக்கையாளர்களை வசப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். புதிய தொழில் தொடங்க எண்ணம் கொள்வீர்கள். பணவரவு அதிகரித்து வங்கிச் சேமிப்பு உயரும். வெளியூர்ப் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள்.


துலாம்

கட்டுமானத் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். கமிஷன் வியாபாரங்கள் கணிசமான லாபத்தைக் கொண்டு வரும். ரியல் எஸ்டேட் தொழிலில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் ஏற்றம் காணும்‌. ஆன்லைன் வர்த்தகங்களின் மூலம் வருமானம் பெருகும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலுக்கான வர்த்தக லைசென்ஸ் பெறுவீர்கள்.

விருச்சிகம்

குடும்பத்தினருடன் ஜாலியாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். சகோதரிக்கு பாடுபட்டு வரன் தேடி முடிப்பீர்கள். இல்லத்தரசி கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்துவீர்கள்‌. அக்கறையுடன் வேலை பார்த்து அதிகாரிகளின் கவனத்தைக் கவருவீர்கள்‌. உறவுகளுக்குள் இருந்த சிக்கலைத் தீர்த்து வைப்பீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டம் போடுவீர்கள்.

தனுசு


விருந்து சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் அவதிப்படுவீர்கள். ஒரு தடவைக்கு இரு தடவை அலைந்து காரியம் பார்க்க வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி வரத் தாமதமாகும். எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். கைபேசியில் வரும் கனிவான பேச்சில் மயங்கி கைக்காசை இழந்து விடாதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக இருங்கள்.


மகரம்


நண்பரின் பைனான்ஸ் கடையில் போட்ட பணத்திற்கான வட்டி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் பிசினஸ் சிறப்பாக நடக்கும். இரும்பு உபரிப் பாக வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். பங்குச்சந்தை ஏற்றமான நிலையில் இருக்கும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலை மேம்படுத்துவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

கும்பம்


வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உங்களை எதிர்க்க நினைத்தவர்கள் ஏமாந்து போவார்கள். தொழிலுக்குப் போட்டியாக இருந்த தடைகள் விலகும்‌. வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை விரைந்து தீர்ப்பீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். உறவினர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மனதிற்கு இதமாக மனைவி நடந்து கொள்வார்.

மீனம்


சுப நிகழ்ச்சிகளால் வீடு கலகலப்பாக இருக்கும். விருப்பமுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் அந்தஸ்தை நிரூபிக்க ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். அரசியல்வாதிகளின் உதவியால் வேலை ஒப்பந்தம் பெறுவீர்கள். வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோயிலுக்குச் செல்வீர்கள். ஆன்மீக காரியங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். 

No comments:

Post a Comment