தேசிய கல்வி கொள்கை பற்றி விவாதம்! பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு துவக்கம் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

16/06/2022

தேசிய கல்வி கொள்கை பற்றி விவாதம்! பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு துவக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் தேசிய மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை குறித்து செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களின் முதல் தேசிய மாநாடு இதுவாகும்.இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று, நாளை என 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது.இதில் மாநிலம், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் உள்பட 200க்கும் அதிகமானவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மத்திய-மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும் மாநிலங்களுடன் இணைந்து நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டுவது குறித்தும், தேசிய கல்வி கொள்கை, உள்கட்டமைப்பு திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.இதுதவிர தேசிய கல்வி கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் பல்வகை பயிர்களை பயிரிடும் திட்டம் போன்றவற்றை அமல்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாத தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மாநிலங்களுடன் இணைந்து விரைவான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது, கல்வி, வேலைவாய்ப்பு, எளிதான வாழ்க்கை ஆகியவற்றை ஏற்படுத்துவது, வேளாண்மையில் தற்சார்பு நிலையை அடைவது போன்றவற்றில் குழுவாக இணைந்து செயல்படுவது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். மேலும் மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459