தமிழ் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே எஸ்ஐ-ஆக முடியும் - ஆசிரியர் மலர்

Latest

17/06/2022

தமிழ் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே எஸ்ஐ-ஆக முடியும்

 சிவகங்கை: தமிழ் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே எஸ்ஐ-ஆக முடியும் என சிவகங்கை எஸ்பி செந்தில்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகச் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 25-ம் தேதி எஸ்ஐ பதவிக்கான தேர்வு நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் 4,160 பேர் விண்ணப்பித்துள்ளனர். காரைக்குடியில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூடச் சீட்டில் தவறு இருந்தால், விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படம் மற்றும் ஏதாவது ஓர் அடையாள அட்டையுடன் மையத்துக்கு வந்தால்போதும். கடந்த காலங்களில் எஸ்ஐ தேர்வில் பொது அறிவுத் தேர்வுக்கு 70 மதிப்பெண்கள், உடற்பயிற்சி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள், சான்றிதழுக்கு 5 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால், இந்த முறை கூடுதலாக தமிழ் தகுதித் தேர்வு தனியாக நடத்தப்படும். மேலும் தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஜூலை 25-ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை பொதுஅறிவுத்தேர்வும், பிற்பகல் 3.30 முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதித் தேர்வும் நடத்தப்படும். இதனால் தேர்வர்கள் தமிழ் தகுதித் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்ஐ தினேஷ் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459