கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன? - ஆசிரியர் மலர்

Latest

15/06/2022

கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன?

ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

2021-22ஆம் கல்வியாண்டுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் தொடக்கக்கல்வி துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களான நம்மைத்தவிர மற்ற அனைவருக்கும் முடிக்கப்பட்டு விட்டது. இதை நடத்துவதற்கு எந்த சங்கமும் வலியுறுத்துவதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. நமக்கு வேண்டும் என்றால் நாம் தான் இனி வரும் காலங்களில் களத்தில் இறங்க வேண்டும். சங்கங்கள் தங்கள் வலிமையை இழந்து நிற்பதால் அது அதை புதுப்பிக்க வேண்டிய கட்டமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது. அது ஒருபுறம் அப்படியே இருக்கட்டும். 

நாம் நமது பிரச்சனையான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தச் செய்ய 3 விதமான வழிகளை கையாள வேண்டியுள்ளது. இதில் யார் யாருக்கு எதில் விருப்பமோ அதன் படியான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

வழி 1 

தொடக்கக்கல்வி துறை இயக்குநரை நேரில் சந்தித்து கலந்தாய்வை இக்கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நடத்த கோரிக்கை விடுத்தல்.

வழி 2

பள்ளிக்கல்வி துறை அமைச்சரை நேரில் சந்தித்து நம் நிலையை கூறி வலியுறுத்துதல்.

வழி 3

வழக்கு தொடுத்தல். வழக்கு தொடுக்க விருப்பமுள்ளவர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும். 

நமக்கு தேவையென்றால் நாம் தான் இனி கேட்க வேண்டும். மற்றவர்களை நம்பி இனி பயன் இல்லை. வாருங்கள் யார் யாரெல்லாம் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை விரும்புகிறீர்களோ அவர்களெல்லாம் தங்கள் பெயரை பதிவு செய்யவும்.

வழக்கு தொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களில் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.

இவண்
முத்துப்பாண்டி - 94867 18060
அமீன் - 9500360730

Whatsapp குழுவில் இணைந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

Join now


நன்றி! 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459