பல கல்வி நிறுவனங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதால், தொற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 4வது அலை தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மருத்துவ நிபுணா்கள் எச்சரிப்பது போன்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
பொதுமக்கள் தனி நபா் இடைவெளி, முகக்கவசம் அணிவது,
போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை மருத்துவ கல்லூரியின் 186ஆவது இளங்கலை பட்டமளிப்பு மருத்துவ நிறைவு தின விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
ஐ பேக்கை கைவிடாத ஸ்டாலின்? திகிலில் மாவட்டச் செயலாளர்கள்!
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க 1664 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டதாகவும், பின்பு மதார்ஸ் மருத்துவ கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டது என்றும் கடந்த 2006 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் ராஜிவ் காந்தி மருத்துவமனை என்று பெயர் வைக்கப்பட்டதகாவும் கூறினார்.
உலகின் 100 சிறந்த மருந்துவக் கல்லூரிகளில் ராஜிவ் காந்தி கல்லூரி 60ஆவது இடத்தை பெற்று உள்ளது என்றும் ஆசியாவில் மிக பழமையான கல்லூரி இது எனவும் நீட் வந்த பின்பும், முன்பும் சரி தமிழக மாணவர்களின் முதல் தேர்வாக ராஜிவ் காந்தி மருத்துவமனை தான் உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் அவரது மகன் மாஸ்கோவில் பட்டம் பெற்றதை விவரித்து அந்த கதையை கூறி நான் பெற்ற மகிழ்ச்சி எப்படி இருந்ததோ, அதே மகிழ்ச்சி தான் இங்கு இருக்கும் பெற்றோருக்கும் இருக்கும் என்று உணர்கிறேன் என பேசினார்.
இந்தியாவில் 302 அரசு கல்லூரிகள், 276 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 578 கல்லூரிகள்
உள்ளது என்றும் அதில் தமிழகத்தில் 70 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும் இது தமிழகத்திற்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு கூறினார்.
நம் வாழ் நாளில் நடைபெற்ற கொடூரம் எது வென்றால் அது கொரோனா வைரஸ் என்றும் கொரோனா பல வகைகளில் உருமாற்றம் அடைந்து மக்களை பதற்றத்தில் வைத்துள்ளதாகவும் தற்போது குரங்கு அமை நோய் உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது என்றும் எதிர்காலத்தில் வெறும் நோயோடு வாழ வேண்டியிருக்கும் என சௌமியா சுவாமிநாதன் கூறிய கருத்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர் நீட் மட்டுமே ஒருவரை தகுதி உள்ள மாணவராக மாற்றாது என்றும் நீட் இல்லாமலேயே இவர்கள் தகுதி உடன் பட்டம் பெற்றுள்ளனர் என்று கூறினார்.
Post Top Ad
ஆசிரியர் மலர் செய்திகள்
To Join => Whatsapp கிளிக்
செய்யவும் To Join => Facebook கிளிக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
செய்யவும்
02/06/2022
கொரோனா 4வது அலை தொடங்கிவிட்டதோ: அமைச்சர் எழுப்பிய சந்தேகம்
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a Comment