11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 27 ல் வெளியீடு - ASIRIYAR MALAR

Latest

Education News

24/06/2022

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 27 ல் வெளியீடு

 +1. தேர்வு முடிவுகள் ஜூன் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் - தமிழக அரசு  தேர்வுகள் துறை அறிவிப்பு

http://www.dge.tn.nic.in. http://www.dge.tn.gov.in

ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.  தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்களும், புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 145 மாணவர்களும் தேர்வு எழுதினர். இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக 5 ஆயிரத்து 673 மாணவ, மாணவியரும் எழுதினர்.மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்து 290, சிறைவாசிகள் 99 பேரும் எழுதினர்.பிளஸ் 1 தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்காக 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தனித் தேர்வர்களுக்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதுதவிர சிறைத் தேர்வு மையங்கள் 9 அமைக்கப்பட்டன. பிளஸ் 1 தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 47315 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படை 3,050 உருவாக்கப்பட்டது.இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை.http://www.dge.tn.nic.in. http://www.dge.tn.gov.in. என்ற இணையதளத்தில் முடிவுகளை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459