தொடர்ந்து 12 ஆயிரம் + கேஸ்கள்.. விடாத கொரோனா வைரஸ்.. பலி எண்ணிக்கை எவ்வளவு? நிலவரம் என்ன? - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

19/06/2022

தொடர்ந்து 12 ஆயிரம் + கேஸ்கள்.. விடாத கொரோனா வைரஸ்.. பலி எண்ணிக்கை எவ்வளவு? நிலவரம் என்ன?


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 12,899 பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 கடந்த ஒரு வாரமாக 12 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், நேற்று 13ஆயிரத்தைக் கடந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் நேற்று முன்தினம் 12,847 பேருக்கும், நேற்று 13,216 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 12,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 96 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது. 


 கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 8,518 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,26,99,363ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒருநாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 15 பேர் பலியாகினர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,24,855ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 72,474 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று 68,108 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று 72, 474 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,24,591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 1.96 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459