மாணவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி : கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

17/06/2022

மாணவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி : கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை : மாணவர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கல்வி நிலையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குனர், அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கையில் > ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்திட வேண்டும். > மாணவர்கள் 100% தடுப்பூசி செலுத்துவதை நிர்வாகங்கள் உறுதி செய்திட வேண்டும். > 12 வயதுக்குட்பட்ட மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய மண்டல சுகாதார அலுவலர்கள் உடன் ஒருங்கிணைந்து தடுப்பூசி முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். > பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். > பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். > கல்வி துறை வெளியிடப்பட்டுள்ள கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற்றிட வேண்டும் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459