ஜூலை 1ம் தேதியில் இருந்து இந்தியாவில் வங்கி மற்றும் பணம் சார்ந்த 5 முக்கிய விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வருமான வரி தொடங்கி கிரெடிட் கார்ட் விதிகள் வரை பலவற்றில் மாற்றங்கள் நடக்க உள்ளன.இந்த விதி மாற்றங்கள் உங்கள் நிதி நிர்வாகத்தில் முக்கியமான சில மாறுதல்களை ஏற்படுத்தும். இந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டு ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.கிரெடிட் கார்ட் விதிஜூலை 1ம் தேதியில் கிரெடிட் கார்ட் பில்லிங் சைக்கிள் மாற்றப்பட உள்ளது. அதன்படி முதல் மாதத்தில் 11ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 10ம் தேதி வரை பில்லிங் கணக்கிடப்படும். ஆர்பிஐ அறிவுறுத்தபடி இந்த பில்லிங் சைக்கிள் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய சொல்லி 7 நாட்களில் அதை வங்கிகள் க்ளோஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 500 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும். அதேபோல் வங்கிகள் கட்டாயமாக யாருக்கும் கிரெடிட் கார்ட் அனுப்ப முடியாது.பான் கார்ட்அதேபோல் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசம் முன்பே முடிந்துவிட்டது. மார்ச் 23ம் தேதியே அவகாசம் முடிந்துவிட்டது. ஜூன் 30ம் தேதிக்கு முன் இந்த இணைப்பை மேற்கொண்டால் 500 ரூபாய் அபராதம். அதுவே ஜூலை 1ம் தேதிக்கு பின் மேற்கொண்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஜூலை 1ம் தேதி இந்த விதி அமலுக்கு வருகிறது.க்ரிப்டோகரன்சிடிடிஎஸ் வரிகள் இனி டிஜிட்டல் பணத்திற்கும் விதிக்கப்படும். அதாவது க்ரிப்டோகரன்சி உட்பட க்ரிப்டோ வருமானத்திற்கு, க்ரிப்டோ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு 1 சதவிகிதம் டிடிஎஸ் பிடிக்கப்படும். டிஜிட்டல் ரீதியாக மேற்கொள்ளப்படும் விர்ச்சுவல் பரிவர்த்தனை எனப்படும்()க்கு மட்டும் இந்த டிடிஎஸ் பொருந்தும்.வருமான வரிவருமான வரியிலும் ஜூலை 1 முதல் மாற்றம் வருகிறது. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து இலவசப் பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், பிரபலங்கள் மற்றும் பிற நபர்கள் ஜூலை 1 முதல் அவற்றைப் பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும். அதாவது பிரபலங்களுக்கு இலவச கார் வந்தால் அதற்கு அவர்கள்தான் வரி செலுத்த வேண்டும். இதேபோல் பிரபலங்கள், மருத்துவர்கள் பெறும்பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டும்.டிமாட் கணக்குடிமாட் கணக்குகளுக்கு கேஒய்சி மேற்கொள்ள ஜூலை 30ம் தேதி வரை மட்டுமே டைம். அதற்குள் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கப்படும். அதாவது பெயர், விலாசம், பான், போன் எண், வருமான விவகாரம், இ மெயில் ஐடி போன்ற விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் டி மாட் கணக்கு மொத்தமாக மூடப்படும்.
Post Top Ad
WhatsApp Telegram
CLICK HERE
29/06/2022
Home
College zone
ஜூலை 1ம் தேதியில் இருந்து இந்தியாவில் வங்கி மற்றும் பணம் சார்ந்த 5 முக்கிய விதிகளில் மாற்றம்
ஜூலை 1ம் தேதியில் இருந்து இந்தியாவில் வங்கி மற்றும் பணம் சார்ந்த 5 முக்கிய விதிகளில் மாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a Comment