TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

07/05/2022

TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக கொடூரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது பள்ளிக்கல்வித்துறை. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் பட்டதாரிகள் அனைவரும் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை கடந்த மாதம் வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்று, தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் அதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 13 ஆம் தேதி என்றும் அறிவித்து இருந்தனர். ஆனால் கடைசி தேதி அன்று இணையதள பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அன்று பதிவு செய்து விடலாம் என்று காத்து இருந்த பட்டதாரிகள் பதிவு செய்ய முடியாமல் இருந்தது. அதனை தொடர்ந்து, மீண்டும் ஒரு வார காலம் நீட்டித்து கால அவகாசம் செய்தனர். இந்த நிலையில் தற்போது அதற்கான சிலபஸ் வெளியாகி உள்ளது. அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்று இரு தாள்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் இதனை டவுன்லோட் செய்வது குறித்து கீழே பார்ப்போம். முதலில், http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும். அடுத்து தனியாக வரும் விண்டோவில், டீட்டைல்டு சிலபஸ் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்று ஆப்ஷன் இருக்கும். இது இரண்டையும் கிளிக் செய்து சிலபஸை டவுன்லோட் செய்துகொள்ளலாம். மேலும் அதனை தொடர்ந்து, பேப்பர் 1 என்பதை கிளிக் செய்யும் போது சிலபஸ் பிடிஎஃப் பைல் ஓப்பன் ஆகும். இதை நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம். அது போலவே பேப்பர் 2 டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459