இன்றுமுதல் பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் - ஆசிரியர் மலர்

Latest

05/05/2022

இன்றுமுதல் பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்

அரசின் தொடர் புறக்கணிப்பினால் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று 05/05/2022 வியாழன் முதல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 12500 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
 திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதி அளித்தது. மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று ஏறத்தாழ ஒரு வருடம் நிறைவடையும் நிலையில்
' நிதி நிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக நிறைவேற்றப்படும் ' என்று மட்டுமே கூறி வருகிறது. அனைத்துச் சலுகைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

  கடந்த வருடம் முழுவதும் ஆளும் கட்சியை ஆதரித்து பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்திலும் இது பற்றி எதுவுமே கூறப்படாதது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தப் போராட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு அழைத்துப் பேசி கவனத்துடன் பரிசீலித்து அறிவிப்பு வெளியிட்டு பணி நிரந்தரம் செய்யுமா? என்று பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

விடியல் அரசே விடியல் கொடு...

 பொன். சங்கர்
 செய்தித் தொடர்பாளர்,
 திருப்பூர். 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459