ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

31/05/2022

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN Tiruppur) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Doorstep Veterinary Consultants பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தவறாமல் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது


நிறுவனம் - Tiruppur Co-op Milk Producers Union Limited (AAVIN Tiruppur)

பணியின் பெயர் - Doorstep Veterinary Consultants

பணியிடங்கள் - 09

விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.06.2022

விண்ணப்பிக்கும் முறை - Offline


கல்வி விவரம்:

Doorstep Veterinary Consultants பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.V.SC, A.H. Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 50 வயது எனவும் AAVIN நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 ஊதியம்:

Doorstep Veterinary Consultants பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.43,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.


தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள பணியாளர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.


நேர்முக தேர்வானது 03.06.2022 அன்று காலை 11 மணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ளது.


விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த AAVIN நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தயார் செய்த விண்ணப்பம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்,

வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை,

திருப்பூர் – 641 605.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459