இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் மாணவர்கள் படிக்க அரிய வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

31/05/2022

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் மாணவர்கள் படிக்க அரிய வாய்ப்பு

புதுடில்லி: விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாக, ஆன்லைன் முறையில் இலவச சான்றிதழ் படிப்பை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கண்ணோட்டம் என்ற தலைப்பில் விண்வெளி குறித்த பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு கற்றுத்தரும் விதமாக இஸ்ரோ, புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10 வயதுக்கு மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பள்ளி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் சேரலாம். எம்.ஓ.ஓ.சி.,யின் ஒரு பகுதியாக ஐ.ஐ.ஆர்.எஸ் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், ஐ.ஐ.ஆர்.எஸ் (IIRS) இணையதளத்தில் சென்று, முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மின்னஞ்சலுக்கு ஆன்லைன் வகுப்புக்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும். அதன் வழியே வகுப்புகளில் பங்கேற்கலாம். வரும் ஜூன் 6ல் துவங்கி ஜூலை 5 வரை ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. 10 மணி நேர படிப்பில், ஆன்லைன் வாயிலாக ஆங்கில மொழியில் வீடியோ ஒளிப்பரப்பப்படும். எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோவை மாணவர்கள் பார்த்து கொள்ளலாம். வீடியோ பார்த்த பின்னர், மாணவர்கள், அது தொடர்பாக கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். நாட்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளால் இந்த படிப்பு நடத்தப்படுகிறது. 70 சதவீத வருகைப்பதிவுடன், 60 விழுக்காடு மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும், இஸ்ரோ, ஐ.ஐ.ஆர்.எஸ் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459