1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது : அமைச்சர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

04/05/2022

1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது : அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வழக்கமான வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என அமைச்சர் கூறியுள்ளார். 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். வழக்கமான வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என கூறினார். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை +2 தேர்வும், நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வும் தொடங்க உள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. வருகிற 28ம் தேதி வரை இது நீடிக்கும் நிலையில், வரும் 24ம் தேதி வரை அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. நாளையில் இருந்து ஐந்து நாட்கள் தேர்வு சனி ஞாயிறு வழக்கமான விடுமுறை!
    இதிலென்ன முன்கூட்டியே விடுமுறை!?

    ReplyDelete