சஸ்பெண்ட் CEO.,வுக்கு தலைமை அலுவலக பதவி - ஆசிரியர் மலர்

Latest

22/04/2022

சஸ்பெண்ட் CEO.,வுக்கு தலைமை அலுவலக பதவி

வினாத்தாள் 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' ஆன கல்வி அதிகாரிக்கு, புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. 
முதல் கட்ட தேர்வில், பிளஸ் 2வில், தமிழ் தவிர, மற்ற பாடங்களுக்கான வினாத்தாள்கள், வலைதளங்களில் கசிந்தன.திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ., அருள்செல்வம், உரிய முறைகளை பின்பற்றாமல், வினாத்தாள்களை பள்ளிகளுக்கு அனுப்பியதால், இந்த தவறு நடந்ததாக கூறப்பட்டது. 

பின் அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஒரு மாதம் கடந்த நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. அவருக்கு, பள்ளிக் கல்வி துறை தலைமை அலுவலக வளாகத்தில், மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் - ஆசிரியர் கழக செயலராக பணியாற்றிய குணசேகரன், தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராகவும், தர்மபுரியில் பணியாற்றும் கணேஷ்மூர்த்தி, திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமாக பொது தேர்வு ஏற்பாடுகள் துவங்கி விட்டால், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் இருக்காது. தற்போதைய பள்ளிக் கல்வி நிர்வாகம், இந்த மரபை மீறி, இந்த மாற்றத்தை செய்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459