தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியயினை உயர்த்த வலியுறுத்தல். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

25/04/2022

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியயினை உயர்த்த வலியுறுத்தல்.

'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படியை உயர்த்த, முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 


அவரது அறிக்கை: கடந்த, 2020-ல், கொரோனா தொற்று பரவல் துவங்கியதால், நாடு முழுதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால், மத்திய - மாநில அரசுகளின் வருவாய் சரிந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது; அதுபற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான எந்த அறிவிப்பையும், தமிழக அரசு வெளியிடவில்லை.

மத்திய அரசு அறிவித்தது போல, அகவிலைப்படி உயர்வை, 34 சதவீதமாக உயர்த்தி, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று, தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் உடனே தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment