சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு - தினசரி உயரும் கொரோனாவால் மாணவர்களிடையே அச்சம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

23/04/2022

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு - தினசரி உயரும் கொரோனாவால் மாணவர்களிடையே அச்சம்


ஐஐடியில் ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை ஐஐடியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை ஐஐடியில் 1420 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 55 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற பொதுமக்களுக்கு மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது.கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால் தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. 2 ஆண்டுகளாக கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஒரு மாதமாக தளர்த்தப்பட்டது. முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது எனவும் அரசு அறிவித்தது. 

கொரோனா அதிகரிப்புகொரோனா தொற்று, தற்போது, பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், கடந்த காலத்தைபோல், கண்டிப்பாக அல்லாமல் அன்போடு அனைவரும் முக கசவம் அணிந்து வரவேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா்.


ரூ. 500 அபராம்


கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்த நிலையில், மக்கள் முகக்கவசம் கூட அணியாமல் சாலைகளில் சுற்றத் தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சொல்லவில்லை என்றும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு


சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று தினசரியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஐஐடியில் கொரோனா உறுதியானவர்களில் பலரும் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறியுள்ளார். வரும் மே 8ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.மொத்தம் 55 பேருக்கு கொரோனா உறுதிஇதனிடையே சென்னை ஐஐடியில் ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை ஐஐடியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை சென்னை ஐஐடியில் 1420 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 55 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தாலும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

.

No comments:

Post a Comment