சனி பெயர்ச்சி பலன் 2022... கஷ்டங்களை நீங்கி விடிவுகாலத்தை தரப்போகும் சனிபகவான் - யாருக்கு தெரியுமா - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

22/04/2022

சனி பெயர்ச்சி பலன் 2022... கஷ்டங்களை நீங்கி விடிவுகாலத்தை தரப்போகும் சனிபகவான் - யாருக்கு தெரியுமா

 


கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் ருண ரோக சத்ரு சனி அமர்வதால் நோய்கள் தீரும் நிம்மதி பிறக்கும் எதிரிகளின் தொல்லை ஒழியும். கும்ப ராசிக்கு வரப்போகும் சனிபகவானால் கன்னி ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகாலமாக இருந்த பிரச்சினைகளுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது.


 விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகிறது.சனிபகவான் உங்களது ராசிக்கு 6 மற்றும் 7ம் வீட்டிற்கு அதிபதி அவர் 6ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு. 30 மாதங்கள் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாகப் போகிறது. இதுநாள் வரை மறைந்திருந்த நோய்களை அடையாளம் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார்.


 இந்த சனிபெயர்ச்சியால் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மார்ச் மாத ராசிபலன் 2022: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு மனமகிழ்ச்சி நிறைந்த மாதம்பண வருமானம் அதிகரிக்கும்இதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும்.வெற்றி மீது வெற்றி வரும்இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.


 வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும்.சகோதரர்களால் சந்தோஷம்உடன்பிறந்த சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கை கூடி வரும். 


குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அம்மாவின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.மதிப்பு மரியாதை கூடும்பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்களின் வாழ்க்கையில் வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள்.போட்டித்தேர்வுகளில் வெற்றிமாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும் நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கு செல்வீர்கள். விளையாட்டு, கலைத்துறை என ஆர்வத்தோடு செயல்பட்டு பரிசுகளை வெல்வீர்கள்.


 சிலருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விக்கடன்கள் எளிதாக கிடைத்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வீர்கள். சாமர்த்தியமும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.வம்பு வழக்குகள் சாதகமாகும்வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளுக்கு வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள்.பண விரையம் அதிகரிக்கும்சனிபகவான் 3வது பார்வையாக உங்கள் ராசிக்க 8ஆம் வீட்டை பார்ப்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும். உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள்.


உணவு விசயத்தில் கவனம்சனிபகவான் 7வது பார்வை விரைய தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும். உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். சரிவிகித சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. 10வது பார்வையாக தைரிய ஸ்தானத்தை பார்வையிடுவதால் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். காரிய வெற்றி உண்டாகும். சனி பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைய பாதாள சொர்ண சனீஸ்வரரையும், ஜெய மங்கள சனீஸ்வரரையும் வணங்கலாம்

No comments:

Post a Comment