மாணவர்களின் பாதுகாப்பு : பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

28/03/2022

மாணவர்களின் பாதுகாப்பு : பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

 பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் வாகனங்கள் பாதுகாப்பாக இயக்குவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிகளில் வாகனங்களை இயக்குவது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்ல உஷா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பள்ளியின் தாளாளரை கைது செய்யும் வரை மாணவரின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459