அடுத்த 3 ஆண்டுகளில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/02/2022

அடுத்த 3 ஆண்டுகளில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அடுத்த 3 ஆண்டுகளில் பணி ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.இதற்கிடையே, அடுத்த 3 ஆண்டுகளில் கணிசமான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னேற்பாடாக ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் அனைத்து வகையான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் 2024 செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளவர்களின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து, இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது 60-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459