ஒமிக்ரானின் ‘பிஏ.2’ வைரஸ் மோசமானது: தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/02/2022

ஒமிக்ரானின் ‘பிஏ.2’ வைரஸ் மோசமானது: தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் ெதாற்றின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், ஒமிக்ரானின் மற்றொரு உருமாறிய வைரசான ‘பிஏ.2’ என்ற வைரஸ் மிகவும் கடுமையான நோயை உண்டாக்கும் திறன் கொண்டதால், அதனை கவலையளிக்கும் உருமாறிய வைரஸ் என்று அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜப்பான் ஆய்வக சோதனைகள் முடிவில், பிஏ.2 தொற்று வைரசானது, டெல்டா உட்பட பழைய உருமாறிய வைரஸ் தொற்றுகளை போன்று தீவிர நோய்களை ஏற்படுத்தும் அம்சங்களைக் கொண்டிருக்கலாம்.


எனவே உலக சுகாதார நிறுவனம் இந்த பிஏ.2 வைரசை கவலையளிக்கக் கூடிய தொற்றாக அறிவிக்க வேண்டும். ேவகமாக பரவக்கூடியது, கடுமையான நோய் தாக்கத்தையும் உண்டாக்கும் குணமுடையது. அனைத்து துணை வகைகளையும் ஆய்வு செய்தில், பிஏ.2 ஆனது பிஏ.1-ஐ விட அதிக வேகமாக பரவக்கூடியது. இருப்பினும், இந்த வைரசின் தீவிரத்தின் அடிப்படையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459