பிளஸ் 2 திருப்புதல் தேர்வு: மேலும் ஒரு வினாத்தாள் லீக்.. அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

15/02/2022

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு: மேலும் ஒரு வினாத்தாள் லீக்.. அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை!

 சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வில் இன்றைய தினம் வணிக கணிதம் நடைபெற இருந்த நிலையில் அதன் வினாத்தாள் லீக்கானது. ஏற்கெனவே உயிரியல், வணிகவியல் வினாத்தாள் லீக்கான நிலையில் தற்போது மேலும் ஒரு வினாத்தாள் கசிந்துள்ளது.10- ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளுக்கான முதற்கட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. பொதுத் தேர்வு போல் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் பயன்படுத்தப்படுகிறது.உயிரியல், வணிகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்கள், தேர்வுக்கு முதல் நாளே சமூகவலைதளங்களில் கசிந்து வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலிருந்து வினாத்தாள் லீக்கானது தெரியவந்தது.அடுத்தடுத்து கசியும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள்..2 தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகல்வித் துறை ஆணையர்சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொன்னூர் காவல்நிலையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வம் புகார் அளித்தார். இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கூறுகையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகள் நடக்கும் முன்னர் சமூகவலைதளங்களில் வினாத்தாள் வெளிவந்ததாக ஊடகங்கள் வழியே அறியப்பட்டது.ஆக்ஸிலியம்இதுகுறித்து, துறைரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், திருவண்ணாமலை மாவட்டம், போலுார் ஆக்ஸிலியம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் இருந்து, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது கண்டறியப்பட்டது.தனியார் பள்ளிகள்இதற்கு காரணமான பள்ளிகளை சேர்ந்த நபர்கள் மீது, தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தேர்வுகள் நடத்துவது குறித்து, தேர்வு துறை இயக்குனர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி, திருப்புதல் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து நடக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.வணிக கணிதம் பாடப்பிரிவுஇந்த நிலையில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு வணிக கணிதம் பாடப்பிரிவுக்கான தேர்வு நடைபெறவிருந்தது. இந்த தேர்வு நடப்பதற்கு முன்னதாக அதன் வினாத்தாளும் சமூகவலைதளங்களில் லீக்காகியுள்ளது. ஏற்கெனவே உயிரியல், வணிகவியல் வினாத்தாள்கள் கசிந்துள்ளதால் இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment