TNPSC - தேர்வு முடிவுகள் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

26/01/2022

TNPSC - தேர்வு முடிவுகள் அறிவிப்பு.


தமிழக அரசு துறைகளின் காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய நான்கு தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* தமிழக தடய அறிவியல் சார்நிலை பணிகளில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 72 காலியிடங்களை நிரப்ப 2019 ஆகஸ்டில் தேர்வு நடந்தது; 8851 பேர் இதில் பங்கேற்றனர்.இந்த தேர்வு முடிவின்படி ஏற்கனவே 65 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள ஏழு இடங்களுக்கு வரும் 15ல் நேர்முக தேர்வு நடக்கிறது. இதில் 21 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்

* தமிழக பொதுப்பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பணியில் 50 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவ.6ல் தேர்வு நடந்தது. இதில் 4047 பேர் பங்கேற்றனர்.இந்த பணிக்கான முதன்மை தேர்வு இந்தாண்டு மே 6 7ல் நடக்க உள்ளது. இதில் 570 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்

* வேலைவாய்ப்பு பயிற்சி பணியில் முதல்வர் மற்றும் உதவி இயக்குனர் பதவியில் ஆறு காலியிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிலவியல் சார்நிலை பணியில் 26 காலியிடங்களுக்கு நடந்த தேர்வுகளுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.இந்த விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.யின் 
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459