TNPSC - குரூப் - 2, குரூப் - 4 தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




29/01/2022

TNPSC - குரூப் - 2, குரூப் - 4 தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு


tnpsc-1-1579865031

 'குரூப் - 2, குரூப் - 4' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுக்கான, 'அப்ஜெக்டிவ்' என்ற கொள்குறி வகை தேர்வில், குரூப் -- 3, குரூப் -- 4, குரூப் - 7 பி, சிறை அலுவலர் மற்றும் சிறை உதவி அலுவலர் பதவிக்கான குரூப் - 8 ஆகிய தேர்வுகளுக்கு, மேம்படுத்தப்பட்ட பாட திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின்,  www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும், குடிமை பணிகளுக்கான 'குரூப் - 2, 2 ஏ' முதல்நிலை தேர்வுக்கான, மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டமும் இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பாடத் திட்டத்தை பார்த்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459