தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

 




27/01/2022

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. இசைத்தட்டுகளை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும் எனவும் கூறியுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதன்பிறகு நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்பதால் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459