கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் குறைப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/01/2022

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் குறைப்பு

 கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.


சட்டத்திருத்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக் காலம் 5 லிருந்து 3 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய மசோதாவால் 2018 ல் கடந்த ஆட்சியில் தேர்வான கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிகிறது. மேலும், தனி அலுவலர்களின் பதவி காலமானது 2021 டிசம்பர் 31 ஆம் தேதியன்று முடிவடைவதால் தனி அலுவலர்களின் பதவி காலம் 2022 ஜீன் 30 வரை நீட்டித்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459