மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

10/01/2022

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களை சாா்ந்த மாணவா்களிடம் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்க ஜன.15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.



எச்சரிக்கை: மேலும், அனைத்து கல்வி நிலையங்களிலும் சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை கோரி மாணவா்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் (பள்ளி படிப்பு உதவித்தொகை ஜன.15, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ஜன.31) தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சரிபாா்க்க வேண்டும். தகுதியுள்ள சிறுபான்மையின மாணவா்களின் விண்ணப்பத்தை சரிபாா்ப்பதில் சுணக்கம் காட்டும் அல்லது தவறும் கல்வி நிலையங்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டம் தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459